என்னென்ன அறிவிப்புகள்? எகிறும் எதிர்பார்ப்பு... இன்று தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்!
இன்று தமிழகத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகை அதிகரிப்பு குறித்து அறிவிப்பு வெளியாக கூடும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தவெக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தொடரின் போது சட்டசபையில் அரசின் புதிய மக்கள் நலத்திட்டங்களை எவ்வாறு முன்வைப்பது, நிதி ஒதுக்கீடுகள் மற்றும் செயல்படுத்தப்படும் கொள்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

முதல் பட்ஜெட்டை வெற்றிகரமாகத் தாக்கல் செய்ய, முதலமைச்சர் விஜய் தலைமையில் கடந்த மாதம் முழுவதும் அனைத்துத் துறை வாரியாக விரிவான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி முடிவு செய்யப்பட்டன. தவெக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பட்ஜெட்டை, நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று காலை சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் வகையிலான முக்கிய அறிவிப்புகளும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
