கனவில் காதலி வந்தால் என்னென்ன பலன்கள்?! நல்லதா? கெட்டதா?

 
காதல் காதலன் கனவு தூக்கம் காதலி
கனவில் காதலி வந்தால் நல்லதா? கெட்டதா? என்ன பலன்கள் என்று பார்க்கலாம்... ஆனால் காதலியின் தந்தையோ, அண்ணனோ கனவில் வந்தால் அதற்கான பலன்கள் இதில் அடங்காது. உலகம் முழுவதும் நாளை காதலர் தினத்தைக் கொண்டாட காதலர்கள் திட்டமிட்டு வருகின்றனர். சுற்றுலா தலங்களில் சொகுசு ஹோட்டல்கள் துவங்கி கடற்கரை, பூங்காக்கள், ரோஜாக்கள் என காதலர்களின் கொண்டாட்டங்களுக்கு உலகமே தயாராகி வருகிறது. விரல் நுனி தேய தேய செல்போனில் நள்ளிரவைத் தாண்டியும் மெசேஜ் தட்டிக் கொண்டிருக்கும் காதலர்கள் தங்களது கல்யாண கனவைத் தேக்கி வைத்திருக்கின்றனர்.  இதில், எந்நேரமும் அவ நெனைப்பு தான்... படுத்தா தானே கனவு வரும் என்கிற ஒரு தலைக் காதலர்கள் ஓரமாக ஒதுங்கிக்கோங்க. இது நிஜ காதலர்களுக்கான பலன்கள் மட்டுமே. 

இந்நிலையில் உங்கள் காதலி கனவில் வந்தால் எதிர்காலத்தில் நிகழப் போகும் நிகழ்வுகள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க. 

கனவு அறிவியலின் படி, ஒரு நபருக்கு காரணம் இல்லாமல் கனவுகள் வராது. இதன்படி, கனவுகள் நம் எதிர்காலத்தைப் பற்றிய பல விஷயங்களை நமக்கு வெளிப்படுத்துகின்றன. இவை நம் வாழ்வில் சுப, அசுப நிகழ்வுகள் நடக்கப் போகிறது என்பதைக் குறிக்கிறது. கனவு அறிவியலின் படி.. கனவுகள் நமது எதிர்காலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் பல சமயங்களில் காதலி அல்லது காதலனும் கனவில் வருவார்கள். ஆனால் இந்த கனவுகள் உங்கள் காதலன் அல்லது காதலியின் நிலையைப் பொறுத்தது.

காதலி புன்னகைப்பதைக் கண்டால்:

உங்கள் கனவில் உங்கள் காதலி புன்னகைப்பதைக் கண்டால், அது சுபமாக கருதப்படுகிறது. இந்த கனவு உங்கள் எதிர்காலத்தில் மகிழ்ச்சி வரும் என்பதைக் குறிக்கிறது. உங்கள் காதல் வலுவடையும் என்பதையும் இது குறிக்கிறது. விரைவில் உங்கள் காதல் திருமணத்திற்கு வழிவகுக்கும்.

காதலி கனவு தூக்கம்

காதலி அழுவது போல் கனவில் வந்தால்:

உங்கள் காதலி அழுவதை கனவில் பார்ப்பது அசுபமாக கருதப்படுகிறது. இது உங்கள் காதலி உங்களிடம் கோபமாக இருப்பதையும், நீங்கள் காதலில் ஏமாற்றப்படலாம் என்பதையும் குறிக்கிறது. அதனால்தான் இதுபோன்ற கனவுகள் வரும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

சிவப்பு நிற புடவையில் காதலி:

உங்கள் கனவில் உங்கள் காதலி சிவப்பு நிற புடவை அணிந்திருப்பதை நீங்கள் கண்டால், அது நல்ல அறிகுறியாகும். இந்த கனவு உங்கள் காதல் உறவில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று அர்த்தம். நீங்கள் திடீரென்று பணம் சம்பாதிக்கலாம்.

காதல்

காதலியுடன் பேசுவது:

உங்கள் கனவில் உங்கள் காதலியுடன் பேசுவதை நீங்கள் கண்டால், விரைவில் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். நீங்கள் திருத்தப்படுவீர்கள் என்றும் அர்த்தம்.

காதலியுடன் சண்டை:

உங்கள் காதலியுடன் நீங்கள் சண்டையிடுவதை கனவில் கண்டால், அது உங்களுக்கு கெட்ட செய்தியாக இருக்கும். அத்தகைய கனவு உங்கள் காதல் வாழ்க்கை பாதிக்கப்படும் மற்றும் உறவில் விரிசல் ஏற்படலாம் என்பதைக் குறிக்கிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

​​​​​​​தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! ​​​​​​​