தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு? - வானிலை மையம் அறிவிப்பு!

 
மழை

வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

இன்று அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.