"படம் பார்த்துக் கண்ணீர் வடிப்பவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?" - உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் காவல் துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவத்திற்குக் காரசாரமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
தூத்துக்குடி காவல் மரணச் சம்பவம் தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' தளத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு. தூத்துக்குடியில் காவலர்களின் சித்திரவதைக்கு ஆளாகி அருணாச்சலம் என்ற இளைஞர் பரிதாபமாக மரணமடைந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

காவல் துறையினர் தனக்கு இழைத்த கொடூரமான அநீதியை, அந்த இளைஞரே தனது இறுதி நிமிடங்களில் வாக்குமூலமாக வெளியிட்ட காட்சிகளைப் பார்க்கும்போது நெஞ்சமே கலங்குகிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல் துறையின் நடவடிக்கையைக் கடுமையாகச் சாடியுள்ள அவர், "காவல் மரணங்கள் நிகழும்போது, அத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் தொடர்ந்து மௌனம் காப்பதால் தான் இத்தகைய கொடூரங்கள் தொடர்கின்றன."
"தனது மகனைப் பறிகொடுத்துக் கண்ணீரில் மூழ்கியுள்ள அருணாச்சலத்தின் குடும்பத்திற்கு, திரையரங்கில் திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?" எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
