அமாவாசை தினத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்ய கூடாது!?

 
அமாவாசை
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் என்றாலும் புரட்டாசி, ஆடி, தை மாதங்களில் வருகின்ற அமாவாசை  தினங்கள் மிக முக்கியமானவை. 

ஆடி அமாவாசை தினத்தில் பித்ருக்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம். ஆடி மாதத்தில் கிளம்பும் பித்ருக்கள் மகாளாய அமாவாசையில் பூலோகம் வந்தடைகின்றனர். மகாளய பட்ச காலத்தில் பூமியில் தங்கி தங்களது சந்ததியினருக்கு அருளாசி வழங்குகின்றனர். 

அமாவாசை பித்ரு தர்ப்பணம்

அமாவாசை தினத்தில் வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும். முன்னோர்களுக்கு திதி கொடுத்த பின் கோலமிடலாம். முன்னோர்கள் படங்களுக்கு துளசி சாற்ற வேண்டும். 

தை அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி விட்டு மீண்டும் பிதுர்லோகம் திரும்பி செல்வதாக ஐதீகம்.

தை அமாவாசை தர்ப்பணத்தை நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கொடுக்கலாம். நமது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து நமக்கு நல்லருள் புரிய வேண்டி வழிபாடு செய்வதே தர்ப்பணம்.

அமாவாசை அன்று மறந்தும்  இதை மட்டும் செய்யாதீங்க!

தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலையில் முன்னோர்களுக்கு படையல் போட்டு விட்டு, சாப்பிடலாம். அத்துடன் பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவு அளிப்பது கூடுதல் சிறப்பான பலன்களை தரும்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web