அட... காதலில் வெற்றி பெற காதலர் தினத்தில் இந்த கலரில் உடை உடுத்துங்க!

 
காதலர் தினம்

உலகம் முழுவதும் காதலை கொண்டாடவும், வெளிப்படுத்தவும் காதலர் தினத்துக்காக காதல் ஜோடிகள் காத்துக் கிடக்கின்றனர்.   பிப்ரவரி மாதம் முழுவதும் காதலின் மாதமாக தான் கருதப்படுகிறது என்ற போதிலும், காதலர் தினம் பிப்ரவரி 14 தான்.   காதலர் தினத்தில்,  குறிப்பிட்ட நிற ஆடைகளை அணிந்தால்,காதலில் வெற்றி அடையலாம் என்பது காலம் காலமாக காதலர்களிடையே கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.  பிப்ரவரி 14 உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில்  காதலர்கள் தங்கள் காதலையும், அன்பையும் தங்களுக்கு பிடித்தவர்களிடம் வெளிப்படுத்துவர். காதலர் தினத்தில் நாம் அணியும் ஆடையை வைத்தே அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளலாம். 


காதலர் தினத்தில் நிறக்குறியீடுகள்:

சிவப்பு நிறம் :

இன்றையதினம் தங்களின் மனம் கவர்ந்தவர்களுக்கு சிவப்பு நிற ரோஜாவை பரிசளிப்பர்.  சிவப்பு என்பது ரொமான்ஸின் சின்னம்.  இதயங்களின் நிறமும் சிவப்பு. இதனால் சிவப்பு நிற ஆடையை அணிந்தால் காதலித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

காதல்

நீல நிறம் :

கடலின் நிறமான நீல நிறம் எதையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. காதலில் இல்லை, ஒருவரின் காதலை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக அர்த்தம். ஆண் அல்லது பெண், காதலை ஏற்றுக்கொள்ள காத்திருக்கிறார் . 

பச்சை நிறம்  :

பச்சை நிறம்  காதலில் காத்திருப்பை குறிக்கிறது.  உங்களுக்கு பிடித்தவரிடம்  காதலை சொல்லி அவரின் பதிலுக்காக காத்திருந்தால் பச்சை நிறத்தில்  ஆடை அணியலாம். 

ஆரஞ்சு நிறம்:

ஆரஞ்சு நிறம் பிடித்தமானவர்களிடம் இன்று காதலை சொல்லப்போகும் நிறம். விருப்பமானவர்களிடம் காதலை சொல்ல தயக்கமாக இருந்தால் ஆரஞ்சு  நிற ஆடை அணிந்து காதலை நாசூக்காக தெரியப்படுத்தலாம். 

வெள்ளை நிறம் :

வெள்ளை நிறம் உங்களுக்கு பிடித்தமானவரிடம் இன்னும் காதலை சொல்லவில்லை என்பதை அறிவிக்கும் நிறம்.  யாரேனும் விரும்பி இருந்தால் அவர்களுக்கு நீங்கள் தனியாக இருக்கிறீர்களா அல்லது காதலில் இருக்கிறீர்களா என்பதை குறிப்பால் உணர்த்தும். 

பிங்க் நிறம்:

ஏற்கனவே ஒருவர் காதலை சொல்லி பதிலுக்காக காத்திருப்பவர்கள் பிடித்திருந்தால் ஓகே சொல்வதற்காக பிங்க் நிறத்தில் ஆடை அணியலாம். 

மஞ்சள் நிறம் :

மஞ்சள் நிறம் காதலில் தோல்வி அடைந்ததை குறிப்பால் உணர்த்தும் நிறம். காதலில் தோல்வியடைந்திருந்தால் மஞ்சள் நிற ஆடை அணிந்து தெரிவிக்கலாம்.

one side love காதல் தோல்வி இளம்பெண் மாணவி அதிகாலை தனிமை மன அழுத்தம்

சாம்பல் அல்லது ஊதா நிறம்:

ஏற்கனவே ஒருவரிடம் காதலை தெரிவித்து விட்டு பதிலுக்கு காத்திருப்பவரிடம்  விருப்பம் கிடையாது என்பதை தெரிவிக்கும் நிறம்.  , அடுத்த முறை இன்னும் சிறப்பாய் அமைய என்னுடைய வாழ்த்துகள் என்று அர்த்தம். 

கருப்பு நிறம்:

காதலர் தினத்தில் ஒருவரை நிராகரிக்கும் நிறம். ஏற்கனவே  காதலை கூறியவரை நிராகரித்தால் கருப்பு நிறம் அணிந்து குறிப்பால் உணர்த்த வேண்டும். கருப்பு நிறம் சிங்கிள் என்பதையும் குறிப்பதாக அர்த்தம்.  விட்டு நிராகரித்தால் இந்த கருப்பு நிற உடை அணிய வேண்டும். உங்கள் காதல் நிராகரிக்கப்பட்டதை இந்த உடை அணிந்து மற்றவர்களுக்கு தெரியப்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்பதையும் குறிக்கிறது.
அவரவர் மனநிலையை பொறுத்து அதற்கேற்ற நிறங்களில் ஆடைகளை அணிந்து காதலை சொல்லலாம். 

From around the web