ஆண்களை விட பெண்களின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு - புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?!

 
பெண்கள் வேலைவாய்ப்பு ஊதியம் வளர்ச்சி பெண்கள் வேலைவாய்ப்பு ஊதியம் வளர்ச்சி

2025-ஆம் ஆண்டில் ஆண்களை விடப் பெண்களின் ஊதியம் அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்துள்ள போதிலும், ஆண்களுக்கு இணையான ஊதியம் பெறுவதில் பெண்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025-ல் பெண்களின் வருமானம் பின்வருமாறு அதிகரித்துள்ளது. சம்பளப் பணிகளில் 7.2% உயர்வு (ஆண்களுக்கு 5.8%) சுயதொழில் செய்பவர்களில் 8.8% உயர்வு (ஆண்களுக்கு 8%) தற்காலிகப் பணிகளில் ஈடுபடுபவர்களில் 5.4% உயர்வு (ஆண்களுக்கு 0.2% சரிவு) பெண்களின் ஊதிய வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தாலும், ஒட்டுமொத்த வருமானத்தில் ஆண்கள் ஈட்டும் தொகையில் ஒரு பகுதியை மட்டுமே பெண்கள் பெறுகின்றனர்.

வேலைவாய்ப்பு முகாம்

ஆண்கள் 100 ரூபாய் சம்பாதிக்கும் இடத்தில், பெண்கள் ஈட்டும் சராசரித் தொகையாக சம்பள வேலைகளில்: ரூ. 76 (76%), தற்காலிக வேலைகளில்: ரூ. 69 (69%), சுயதொழிலில்: ரூ. 36 (36%) குறிப்பாகச் சுயதொழிலில் ஈடுபடும் பெண்களின் வருமானம் ஆண்களை விட மிக மோசமாக (மூன்றில் ஒரு பங்கு மட்டுமே) இருப்பது இத்தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

சவால்கள் இருந்தாலும், சில சாதகமான மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. சம்பளப் பணிகளில் பெண்கள்: 2024-ல் 16.6% ஆக இருந்த சம்பளம் பெறும் பெண்களின் விகிதம், 2025-ல் 18.2% ஆக உயர்ந்துள்ளது. இது உயர்தர வேலைவாய்ப்பின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

வாக்கிங் ஜாக்கிங் பெண்கள் ஓட்டம் மெரீனா கடற்கரை நடைபயிற்சி

கிராமப்புற வேலையின்மை 2.4% ஆகவும், நகர்ப்புற வேலையின்மை 4.8% ஆகவும் குறைந்துள்ளது. 15-29 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் வேலையின்மை 9.9% ஆகக் குறைந்துள்ளது.

புள்ளிவிவர அமைச்சகத்தின் மற்றொரு கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் முறைசாராத் துறையில் ஊதிய வளர்ச்சி 2025-ல் வெறும் 3.9% ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் இது 13% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாகப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் வேகம் 1.1 கோடியிலிருந்து 74.5 லட்சமாகக் குறைந்துள்ளது.