5 நாளாச்சு... சுரங்க விபத்தில் சிக்கிய 40 தொழிலாளர்களின் கதி என்னாச்சு? .. மாஸ்டர் ப்ளான்..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்க பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது 270 மீட்டர் தொலைவில் அந்த சுரங்கம் சரிந்து விழுந்தது. 30 மீட்டர் நீளப் பகுதி அப்படியே சரிந்ததால் ஒருபக்கம் முழுவதும் மூடிக் கொண்டது. இதனால் 40 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களை மீட்கும் பணி 5 வது நாளாக தொடர்கிறது.தொடர் மழையால் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொழிலாளர்களுடன் பைப்கள் மூலம் தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இதன்மூலம் தண்ணீர், ஆக்சிஜன், உணவு, மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
#WATCH | Uttarkashi Tunnel Accident | Uttarakhand: Director NHIDCL (National Highway & Infrastructure Development Corporation Limited) Anshu Manish Khalkho says, "Since yesterday, we have used a machine named Auger, through which we drill and try to make tunnel... We noticed that… pic.twitter.com/8NyIJVS6bI
— ANI (@ANI) November 15, 2023
இவர்களை மீட்க பிரம்மாண்ட ஸ்டீல் பைப்கள் உள்ளே செலுத்தும் பணிகள் நேற்று தொடங்கின. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. ட்ரில்லிங் செய்த போது இயந்திரத்தின் மீது பாறைகள் சரிந்து விழுந்து சேதமாகியதால் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட 2 வீரர்கள் காயமடைந்தனர். சரிந்து விழுந்த குகை பகுதியை ட்ரில்லிங் இயந்திரம் மூலம் குடைய வேண்டும்.
800 மில்லிமீட்டர் மற்றும் 900 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட மெல்லிய ஸ்டீல் பைப்களை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே செலுத்தி அங்கிருந்து தொழிலாளர்கள் ஒவ்வொருவராக வெளியே வர வேண்டும் என்பது தான் ப்ளான். தற்போது பழுதான ட்ரில்லிங் இயந்திரத்திற்கு பதிலாக டெல்லியில் இருந்து மற்றொரு இயந்திரம் விமானப்படை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பைப்களை 30 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மாற்று ஏற்பாடுகள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதே போல் ஒரு சம்பவம் 2018ல் தாய்லாந்தில் குகைக்குள் ஜூனியர் கால்பந்து அணியை சேர்ந்த 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள் சிக்கித் தவித்தனர். தொடர்மழையால் குகையும் வெள்ளக்காடாகியது. 2 வார போராட்டத்திற்கு பின்னர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த பணியில் ஈடுபட்ட வல்லுநர்களின் உதவியை இந்திய அரசு நாடியுள்ளது. மேலும் நார்வே ஜியோ டெக்னிகல் நிறுவனத்தை சேர்ந்த மண் மற்றும் பாறைகள் சார்ந்த வல்லுநர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
இதுவரை சிக்கிக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன், மின்சாரம், மருந்துகள், உணவு, தண்ணீர் அனைத்தும் பைப்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. விரைவில் மீட்டு விடுவோம். அனைவரும் தைரியமாக நம்பிக்கையுடன் இருங்கள் என நம்பிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!