கொடைக்கானல் சுற்றுலா சென்ற போது நேர்ந்த விபரீதம்.. திடீரென தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்!

 
கார் தீ விபத்து

தமிழகத்தில் தற்போது வெப்பத்தின் தாக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் நீலகிரி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, இன்று புனித வெள்ளி விடுமுறை என்பதால், வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறையை கொண்டாட மக்கள் சுற்றுலா தலங்களில் குவிந்துள்ளனர்.

அந்த வகையில் பொள்ளாச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு 6 பேர் சொகுசு காரில் சுற்றுலா சென்றனர். இன்று அவர்கள் பழனியில் இருந்து கொடைக்கானல் நோக்கி சவரிக்காடு மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தனர். கோம்பைக்காடு என்ற பகுதிக்கு வந்தபோது, இன்ஜினில் இருந்து புகை வருவதைக் கண்டு 6 பேரும் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினர். அப்போது திடீரென கார் முழுவதுமாக  தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதுகுறித்து பழனி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தை அடைவதற்குள் கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது.புகை மூட்டத்தை பார்த்ததும் காரில் இருந்து 6 பேர் இறங்கியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் அவ்வப்போது காட்டுத் தீ எரிந்து வருகிறது. இந்நிலையில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web