"தமிழகத்தில் நடப்பதே காமராஜர் ஆட்சி தான்" - அமைச்சர் விஸ்வநாதன் பெருமிதம்!
Oct 26, 2026, 19:00 IST
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியானது பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சிதான் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகச் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் இடம் பெற்று, 2 அமைச்சர்களுடன் தவெக தலைமையிலான ஆட்சியில் அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்றுள்ளதாகக் குறிப்பிட்ட குறிப்பிட்டார்.

மேலும், கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் புகழைப் போற்றும் வகையிலும், அவரது வழியைப் பின்பற்றும் வகையிலும் தமிழக அரசு சார்பில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் அவரது பெயரிலேயே முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொலைநோக்குப் பார்வையுடன் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஸ்வநாதன் பெருமிதத்துடன் கூறினார்.
