"விதி 110-ன் கீழ் திட்டங்களை அறிவித்தால் நிதிநிலை அறிக்கை எதற்கு?" - சீமான் கண்டனம்!

 
சீமான்விஜய் விஜய்சீமான்

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் தொடர்ச்சியாகத் திட்டங்கள் அறிவிக்கப்படுவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசின் அனைத்துத் திட்டங்களும் விதி 110-ன் கீழ் மட்டுமே அறிவிக்கப்படும் என்றால் எதற்காக நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான்,விஜய்

நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத திட்டங்களை விதி 110-ன் கீழ் அவசரமாக அறிவிப்பது மக்களுக்கு எதிரானது என்றும், முறையான நிதி ஆதாரங்கள் இல்லாத விளம்பரத் திட்டங்களை இந்த முறையில் அறிவிப்பதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய அரசியல் சூழலில், சட்டப்பேரவை நிகழ்வுகள் மற்றும் பல்வேறு கட்சிகளின் எதிர்வினைகள் குறித்த உங்களின் கருத்து என்ன?