என்னங்கடா இது? தவெகவுக்கு வந்த புதிய சோதனை... ஏப்ரல் 29க்குள் பதில் அளிக்க உத்தரவு... நீதிமன்றம் அதிரடி!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சினிமாவில் முண்ணனி நடிகர் விஜய். இவரது கட்சிக் கொடியில் யானை சின்னம் இருப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றி கழகம் இன்னும் முறையாக பதிவு செய்யப்படவில்லை. தவெக பதிவு செய்த பிறகு இது தொடர்பாக விசாரணை நடத்தி முடிவெடுக்கப்படும் எனக் கூறியிருந்தது.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்பவர் சென்னை உரிமைகள் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை தமிழக வெற்றிக்கழகம் பயன்படுத்துகிறது.
அதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி இது குறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்டபோது அவர்கள் முறையாக பதிவு செய்த பின் நடவடிக்கை எடுக்கிறோம் எனக் கூறிவிட்டனர். அஸ்ஸாம் தவிர பிற அனைத்து மாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய சின்னமாக யானை இருக்கிறது எனக் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட நீதிபதிகள் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஏப்ரல் 29ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!