எது சைவம்? எது வைணவம்? - முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு கைது வாரண்ட்!

 
பொன்முடி

சைவ, வைணவ சமயங்களை ஆபாசமாக ஒப்பிட்டும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்குச் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

பொன்முடி

பொதுமேடை ஒன்றில் சமயங்களையும் பெண்களையும் இழிவுபடுத்திச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்குச் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பொன்முடி ஆஜராகவில்லை.

பொன்முடி

நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து, பொன்முடியைக் கைது செய்து வரும் செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.