என்ன கொடும சார் இது... பூனையாக மாற நினைத்து ரூ.10 லட்சத்தில் அறுவை சிகிச்சை செய்த இசைக்கலைஞர்!

உலகம் முழுவதும் பொதுவாகவே பெண்கள் அழகு, கம்பீரம், ஆசைக்காக செலவழிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதில் சிலர் கோடிக்கணக்கில் செலவழித்து உள்ளதையும் தொலைத்து ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா கோஸ்ட்டைச் சேர்ந்த 28 வயதான இசை கலைஞர் ஜோலீன் டாசன் தனது தோற்றத்தை பூனையாக மாற்றிக் கொள்ள விரும்பினார்.
இதற்காக செய்யப்படும் அறுவை சிகிச்சைக்காக அவர் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்திருப்பதாக கூறியுள்ளார். இந்த பூனை போன்ற தோற்றத்தை பெறுவதற்காக ஊசி மருந்துகளுடன் கூடுதலாக ஒரு பரிசோதனை செய்து அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டதாக அந்த பெண் கூறியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புதுப்பிப்பு தேவை என உணர்ந்ததால் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அவரது மூக்கு, தாடையின் வடிவங்கள் மாற்றப்பட்டு விட்டன. நான் பூனையுடன் நிறைய பழகி இருக்கிறேன். அதுதான் நான் அவற்றை தேர்ந்தெடுக்க காரணம். அவை நம்ப முடியாத அளவிற்கு ஸ்டைலானவை. தன்னிறைவு பெற்றவை மற்றும் சுதந்திரமானவை என விளக்கம் அளித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!