என்னாவாக இருக்கும்?! தமிழகமே எதிர்பார்ப்பு... இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு.. முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று வெளியாக இருக்கும் அறிவிப்பு என்னவென்று சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அந்த அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி தமிழகத்தின் முக்கிய அகழாய்வாக பார்க்கப்படும் கீழடியில் கிடைக்கபெற்ற பொருட்களை வைத்து கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அதே போல் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கும் முதல்வர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது!
— M.K.Stalin (@mkstalin) January 22, 2025
வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்!@TThenarasu https://t.co/umbpC8ZmLs
கீழடி இணையதளத்தையும் இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா இன்று சென்னையில் நடைபெற உள்ள நிலையில் அந்நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பை முதல்வர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், இன்று முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது! வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்! என பதிவிட்டுள்ளார். தொல்லியல்துறை சார்ந்த முக்கிய அறிவிப்பை இன்று முதல்வர் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 5ம் தேதி சிந்து சமவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கம், சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது. இவ்விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ' சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் வழி வகையை வெளிக் கொணரும் தனி நபர்கள் மற்றும் அமைக்கு ரூ.10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும்' எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!