செம... வாட்ஸ் அப்பில் லேட்டஸ்ட் அப்டேட்!! பயனர்கள் உற்சாகம்!!

 
வாட்ஸ் அப்

சர்வதேச அளவில் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள தகவல் பரிமாற்ற செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப் செயலி. வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், தொழில்நுட்ப வகையில் மேம்படுத்தவும் அவ்வப்போது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.  அந்த வகையில் வாட்ஸ்அப் செயலி விரைவில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிடவுள்ளது.  அந்த வகையில் வீடியோ கால்களின் போது ஒரு பயணர் தன்னுடைய மொபைல் ஸ்க்ரீனை மற்றொருவருக்கு ஷேர் செய்து கொள்ளலாம்.  

வாட்ஸ் அப்

தற்போது சோதனை முறையில் இருந்து வரும் இந்த புதிய அம்சம், விரைவிலேயே ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில்   அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  
இந்த ஸ்கிரீன் ஷேர் வசதியை  பேசிக்கொண்டிருப்பவருக்கு  ஆன் செய்து விட்டால்  போனில்  என்னவெல்லாம் செய்கிறீர்களோ அவை அனைத்துமே வீடியோ காலில் இருக்கும் மற்றொரு நபரால்  மொபைல் திரையில் பார்க்க முடியும். 

வாட்ஸ் அப்


இந்த  ஸ்கிரீன்ஷேர் வசதியானது வாட்ஸ்அப் பயணர்கள் வீடியோ கால் பேசும்போது செல்போன் திரையின் கீழ்ப்பக்கத்தில் தோன்றும் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன்  விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயணர்களுக்கு புதிய கால் பேக் வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதே போல்  இன்ஸ்டாகிராமில் “சேனல்” என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.   இதன் மூலம் இன்ஸ்டா கிரியேட்டர்கள் புதிய பதிவுகளை தினமும் தங்களது ஃபாலோயர்களுக்காக போஸ்ட் செய்து கொள்ளலாம். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web