வாட்ஸ்அப்பில் அதிரடி அப்டேட்... முக்கியமான தகவல்களை இனி மிஸ் பண்ணாதீங்க... அசத்தலான ‘லிஸ்ட்’ வசதி அறிமுகம்!
இன்றைய அவசர உலகில் வாட்ஸ்அப் என்பது வெறும் உரையாடல் செயலியாக மட்டும் இல்லாமல், அலுவலகம் மற்றும் குடும்ப வேலைகளின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. ஆயிரக்கணக்கான மெசேஜ்கள் குவிந்து கிடக்கும்போது, நமக்குத் தேவையான முக்கியமான தகவல்களைத் தேடிக் கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வாட்ஸ்அப் நிறுவனம் ‘கஸ்டம் லிஸ்ட்’ (Custom Lists) என்ற ஒரு அட்டகாசமான புதிய வசதியைத் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இந்த வசதியைப் பயன்படுத்தி உங்கள் வாட்ஸ்அப் சாட்களைக் குடும்பம், வேலை, நண்பர்கள் எனத் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் வேலை தொடர்பான மெசேஜ்களைப் பார்க்க வேண்டுமென்றால், அந்த லிஸ்ட்டை கிளிக் செய்தால் போதும், சம்பந்தப்பட்ட நபர்களின் தகவல்கள் மட்டும் தனியாகத் தெரியும். இதனால் தேவையில்லாத மெசேஜ்களைத் தாண்டி, முக்கியமான செய்திகளைத் தேடி நேரத்தை வீணடிப்பது இனி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ‘லிஸ்ட்’ அம்சத்தைப் பயன்படுத்த வாட்ஸ்அப் சாட் பகுதிக்குச் சென்று கீழே ‘ஸ்வைப்’ செய்தால் லிஸ்ட் என்ற ஆப்ஷன் கிடைக்கும். அதில் உங்களுக்கு வேண்டிய பெயர்களில் பட்டியல்களை உருவாக்கி, தேவையான நபர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். முக்கியமான உரையாடல்களுக்கு முன்னுரிமை அளித்து, வாட்ஸ்அப் பயன்பாட்டை மேலும் எளிமையாகவும் நேர்த்தியாகவும் மாற்றும் ஒரு பயனுள்ள அப்டேட்டாக இது பார்க்கப்படுகிறது.
