இனி ஒவ்வொரு அரட்டையையும் திறக்க வேண்டாம்... வாட்ஸ்அப் செயலியில் வரும் புதிய வசதி!

 
வாட்ஸ் அப் வாட்ஸ் அப்

உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலி, தங்களின் பயனர்களைக் கவர்வதற்காகப் பல்வேறு புதிய வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. தற்போதைய சூழலில் நமது பட்டியலில் உள்ளவர்கள் யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரின் தனிப்பட்ட அரரைப் பகுதியைத் திறந்து பார்க்க வேண்டிய நிலை உள்ளது. பயனர்களின் இந்தச் சிரமத்தைக் குறைக்கும் வகையில் தற்பொழுது ஒரு புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் உருவாக்கி வருகிறது.

வாட்ஸ் அப்

இதன்படி கான்டாக்ட் ஹப் என்ற புதிய பகுதி வாட்ஸ்அப் செயலியில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வசதியின் மூலம் ஆன்லைனில் இருக்கும் அனைத்து நண்பர்களையும் ஒரே இடத்தில் எளிதாகப் பார்த்துவிட முடியும். நாம் யாருடன் அதிகத் தொடர்பில் இருக்கிறோமோ அவர்களின் பெயர்கள் பட்டியலின் மேல் பகுதியிலும், ஆன்லைனில் இருப்பவர்களின் முகப்புப் படத்திற்கு அருகில் பச்சை நிறப் புள்ளியும் தோன்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்

இதற்குச் சற்று கீழே சமீபத்தில் ஆன்லைனில் வந்து சென்றவர்களின் பட்டியலும் இடம்பெறும் என்பதால், இனி ஒவ்வொரு அரட்டையையும் தனித்தனியாகத் திறந்து பார்க்க வேண்டிய தேவை இருக்காது. இந்த வசதியுடன் புதிய எண்களைச் சேர்ப்பதற்கான வசதிகளும் இதில் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தற்பொழுது சோதனை கட்டத்தில் இருக்கும் இந்த அம்சம், விரைவில் அனைத்துப் பயனர்களின் பயன்பாட்டிற்கும் வரவுள்ளது.