இது என்ன புதுசா இருக்கு.. தலையில் கரகத்துக்குப் பதில் சிலிண்டர்.. வைரலாகும் பெண்ணின் நடனம்..!

 
சிலிண்டர் வைத்து நடனம்
தலையில் சிலிண்டர் வைத்து நடனமாடும் பெண்ணின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

உலகமே சமூக வலைதளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அனைவரும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோவாக இணையதளத்தில் வெளியிடுகிறார்கள். முக்கியமாக ஷார்ட்ஸ், ரீல்ஸ் என ட்ரெண்டாகி வரும். சமீபத்தில் துர்கா என்ற பெண்மனி தலையில் சிலிண்டர் வைத்து நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த விடியோவில், தலையில் கேஸ் சிலிண்டரை வைத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக எந்தவித சிரமமும் இன்றி நடனமாடுகிறார். அதோடு நிறுத்தாமல், சிலிண்டர் தலையில் இருக்கும்போதே இரும்பு பாத்திரம் ஒன்றின் மீது காலை வைத்து ஏறி நின்று ஸ்டண்ட் செய்து சாகசம் செய்துள்ளார்.
இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கிட்டத்தட்ட 28 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த விடியோவை பார்த்து, கருத்தும் தெரிவித்துள்ளனர்.

பலரும் இந்த விடியோக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதில் ஏன் இதுபோன்று பாதுகாப்பற்ற சாகசங்களை வீட்டில் செய்கிறீர்கள்? உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து உயிரைப் பணயம் வைக்க வேண்டும்? பாதுகாப்பாக இருப்பது நல்லது என குறிப்பிட்டுள்ளனர். 

From around the web