செம... வாட்ஸ் அப்பில் உடனடி வீடியோ!! லேட்டஸ்ட் அப்டேட்!!

 
வாட்ஸ் அப்

தகவல் பரிமாற்ற செயலிகளில் கோடிக்கணக்கான பயனர்களை பெற்றிருக்கும் செயலி வாட்ஸ் அப். இந்நிறுவனம் வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், மேம்படுத்தும் வகையிலும் அடுத்தடுத்து தொழில்நுட்ப மேம்பாடுகளை செய்து வருகிறது.  அந்த வகையில் இதுவரை வாட்ஸ் அப்பில் பிற தளங்களில் இருந்து வரும் வீடியோவை அப்லோடு செய்தே பிறருக்கு அனுப்பி வந்தனர்.

வாட்ஸ் அப்

இப்போது வாட்ஸ் அப் நேரடியாகவே வீடியோ எடுத்து, அதைப் பகிரும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.   வழக்கமான வீடியோவாக இல்லாமல் இதை வேறுபடுத்திக் காட்ட இது வட்ட வடிவில் காட்டப்படும்.இந்த மேம்பாட்டால் பாதுகாப்பானதாகவும், தனிப்பட்டவருக்கு பகிர்வதற்கு ஏற்றதாகவும் அமையும் என  வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்

இந்த வசதியை பயன்படுத்தி  உடனடி வீடியோ செய்திகள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியையும், கேளிக்கையையும் வெளிப்படுத்த மிகவும் எளிய முறையில் வசதியாக இருக்கும் என அறிவித்துள்ளது.  இதன் மூலம்  பிறந்தநாள் வாழ்த்து தொடங்கி, மகிழ்ச்சியைப் பகிர்வது வரை பலரும் இந்த சேவையை பயன்படுத்துவார்கள் என வாட்ஸ் அப் விளக்கம் அளித்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web