வாட்ஸ் அப்பில் அட்டகாசம்.. உடனே செட்டிங்க்ஸ்ல இதை மாத்துங்க.. மாஸ் அப்டேட் ரெடி!

 
வாட்ஸ் அப் கால் வாட்ஸ் அப் கால்

இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப், தனது அழைப்பு வசதியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

நீங்கள் பேருந்து நிலையம், சந்தை அல்லது அதிக சத்தம் உள்ள பொது இடங்களில் இருந்து பேசினாலும், உங்கள் குரல் மட்டும் மறுமுனையில் இருப்பவருக்குத் தெளிவாகக் கேட்கும் வகையில் 'நாய்ஸ் கேன்சலேஷன்' தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஏஐ மூலம் இயங்குகிறது. இது பேசும் நபரின் குரலை மட்டும் அடையாளம் கண்டு, பின்னணியில் கேட்கும் வாகன ஹார்ன் சத்தம், காற்றின் வேகம் அல்லது மற்றவர்களின் பேச்சுகளைத் தானாகவே குறைத்துவிடும்.

வாட்ஸ் அப்

இந்த அப்டேட் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு தளங்களிலும் பீட்டா சோதனையில் உள்ளது. வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இந்தப் புதிய வசதி படிப்படியாக வழங்கப்படும். வாட்ஸ்அப் செட்டிங்ஸில் உள்ள 'Storage and Data' பகுதிக்குச் சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள 'Noise Cancellation for Calls' என்ற ஆப்ஷனை ஆன் செய்வதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம்.

வாட்ஸ் அப்

இந்த அப்டேட் மூலம் குறைந்த இணைய வேகம் இருக்கும் இடங்களிலும் ஆடியோ கால்கள் துண்டிக்கப்படாமல், சீரான தரத்துடன் இருக்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.