செம... வாட்ஸ்அப்பில் இனி மின் கட்டணம் செலுத்தலாம்... !

 
வாட்ஸ் அப்

 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து வாட்ஸ்அப்பின் தலைமைச் செயல் அதிகாரி குணால் ஷா வெளியிட்டுள்ள தகவல்கள் பயனர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளன.

WhatsApp Plans Major Expansion Into AI, Digital Payments And Smarter Messaging

அன்றாடப் பணிகளை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகச் செய்யும் வகையில், நிதி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து புதிய சேவைகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணம் செலுத்துதல், பணப் பரிவர்த்தனை, பயணத்தின்போது இணைய இணைப்பைப் பெறுதல் உள்ளிட்ட சேவைகளைச் சாட் அனுபவத்துடன் எளிதாக இணைப்பதே இதன் நோக்கம்.

WhatsApp May Soon Let You Pay Bills, Manage Bookings And Use AI Within Chat | Tech News - News18

இந்தியாவில் மின்சாரம், குடிநீர், எரிவாயு, ஃபாஸ்டேக் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை வாட்ஸ்அப் மூலம் செலுத்தும் வசதி ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்பதிவுகள், சந்திப்புகள் உள்ளிட்டவற்றை நினைவூட்டும் வசதிகளையும் மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், பயனர்களின் தனிப்பட்ட மெசேஜ்கள் மற்றும் அழைப்புகளுக்கான எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பு தொடர்ந்து நீடிக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.