குட் நியூஸ்... இனி போன் சுவிட்ச் ஆஃப் ஆனாலும் மெசேஜ் போகும்... வாட்ஸ்அப்பில் சூப்பர் வசதி!

 
வாட்ஸ் அப்

 

வாட்ஸ்அப் பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மெசேஜ் ஷெட்யூல் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தனிநபர் மற்றும் குரூப் சாட்களில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் தானாகவே மெசேஜ் செல்லுமாறு முன்கூட்டியே திட்டமிட முடியும்.

WhatsApp is rolling out a new feature that lets users schedule text messages, photos and videos for later delivery. Messages can be scheduled up to two weeks in advance and sent automatically,

செய்தியை டைப் செய்த பிறகு செண்ட் பட்டனை சில நொடிகள் அழுத்திப் பிடித்தால், தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்யும் வசதி தோன்றும். குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 14 நாட்கள் வரையிலான காலத்திற்குள் மெசேஜ் அனுப்பும் நேரத்தைத் திட்டமிட்டுக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் அல்லது பேட்டரி தீர்ந்திருந்தாலும் திட்டமிட்டபடி மெசேஜ் சென்றுவிடும் என்பது இதன் சிறப்பம்சமாகும். அனுப்புவதற்கு முன்பு திட்டமிடப்பட்ட மெசேஜ்களைப் பார்க்கவும் நீக்கவும் முடியும்.

WhatsApp मध्ये आलं सर्वात मोठं फिचर; फोन बंद असला तरी सेंड होईल मेसेज, फक्त सांगायची वेळ - Marathi News | whatsapp schedule messages delivered even phone is off | Latest Tech News

எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் பாதுகாப்புடன் கூடிய இந்த வசதி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு அடுத்த சில வாரங்களில் படிப்படியாகக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.