டாஸ்மாக் புகார்களைத் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்!

 
டாஸ்மாக்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது மற்றும் பிற முறைகேடுகள் குறித்துப் பொதுமக்கள் எளிதில் புகாரளிக்கும் வகையில் புதிய தொடர்பு எண்களை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 7397720230 என்ற எண்ணின் வாயிலாக மதுபான விலை மற்றும் பிற புகார்களை வாட்ஸ்அப் மூலமாகப் பதிவு செய்யலாம்.

1800 889 2015 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொண்டும் வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம்.

டாஸ்மாக்

சமூக வலைதளம் மூலமாக @Tasmacoffical என்ற அதிகாரப்பூர்வ எக்ஸ் தளக் கணக்கிலும் புகார்களைப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் புதிய புகாரளிக்கும் வசதிகள் நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.