கட்டண சேவையாக மாற போகும் வாட்ஸ் அப்... பயனர்கள் அதிர்ச்சி...!!
தகவல் பரிமாற்ற செயலிகளில் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டது வாட்ஸ் அப் செயலி. வாட்ஸ் அப் செயலி பயன்பாடு வாடிக்கையாளர்களுக்கு மிக நீண்ட காலமாகவே இலவச சேவையாக வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இலவச சேவையாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், வாட்ஸ்அப் சேட் பேக்அப் கூகிள் கணக்கில் எவ்வாறு சேமிக்கப்படும் என்பதில் வாட்ஸ்அப் மற்றும் கூகுள் நிறுவனங்கள் மாற்றங்களை அறிவித்துள்ளன. இதனால் வாட்ஸ் அப் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது இனி வாட்ஸ்அப் பேக்அப் என்பது இலவசமாக இல்லாமல் கட்டண சேவையாக மாற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பேக்அப்கள் விரைவில் பயனரின் கூகுள் அக்கவுண்ட் கிளவுட் ஸ்டோரேஜ் வரம்பில் இணைக்கப்படும் என கூகுள் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்கள் தற்போது அறிவித்துள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!