தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபரீதம்.. 2பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

 
 சேகரன், சுப்ரமணி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சில தொழிலாளர்கள் பெயின்டிங் பணிக்காக   இங்கு வந்து தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். பெயின்டிங் அடிக்கும் பணி முடிவடைந்த நிலையில், 4 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல பொன்னேரி ரயில் நிலையம் சென்றுள்ளனர்.

இந்நிலையில் சேகர், சுப்ரமணி ஆகியோர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து வந்த ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைப் பார்த்த ரயில்வே நிலையத்தில் இருந்தவர்கள் பொன்னேரி ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சேகரன், சுப்ரமணி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web