லாரியின் பின்சக்கரத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்... தலை நசுங்கி பலியான இளைஞர்!
திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடியை அடுத்த அதங்குடி புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் பிருத்திவிராஜ் (வயது 20). கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு, தனியார் உணவுப் பரிசோதனை ஆய்வகத்தில் பணிபுரிந்தார். இவர் நேற்று முன்தினம் நாகை மாவட்டம் திருக்குவளை அருகே காருகுடி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றார்.

நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்து தனது நண்பர் தமிழரசனுடன் திருக்குவளை-கொளப்பாடு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது, பிரிதிவிராஜ் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாக லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதில் பிருதிவிராஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருக்குவளை போலீசார், பிரிதிவிராஜ் ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய தமிழரசன் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!
