திருமணம் முடிந்து வீட்டிற்கு சென்ற போது விபரீதம்.. கோர விபத்தில் புதுமண தம்பதி உட்பட 7 பேர் பலியான சோகம்!

 
பிஜ்னூர் விபத்து

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூரில் புதுமணத் தம்பதிகள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். மணமக்கள் இருவருக்கும் நேற்று மாலை ஜார்கண்ட் மாநிலத்தில் திருமணம் நடந்தது. இதைத்தொடர்ந்து, இன்று காலை புதுமணத் தம்பதிகள் பிஜ்னூரில் உள்ள தம்பூர் பகுதியில் உள்ள மணமகன் வீட்டுக்குச் செல்ல வாகனத்தில் புறப்பட்டனர். அவர்களுடன் உறவினர்களும் இருந்தனர்.

இவர்களது வாகனம், தேசிய நெடுஞ்சாலை 74ல், எதிரே வந்த டெம்போ மீது மோதியது.இந்த விபத்தில், இரு வாகனங்களும், அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. மணமக்கள் வாகனத்தில் 11 பேர் வரை இருந்தனர். அவர்களில் மணமகன், மணமகன், அவரது சகோதரர் மற்றும் அத்தை இருந்தனர். இந்த விபத்தில் மணமகன், மணமகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருள் சூழ்ந்ததால், மேகமூட்டமான வானிலை காணப்பட்டது. இதன்காரணமாக, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார். மேலும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web