ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்ற போது விபரீதம்.. அப்பளம் போல் நொறுங்கிய கார்.. 6பேர் பரிதாபமாக பலி..!!

 
உத்தரப்பிரதேச விபத்து

ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்ற 6 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் இருந்து ஹரித்தூவருக்கு 6 பேர் காரில் ஆன்மிக சுற்றுலாவுக்கு சென்றுக்கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர்நகர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி பின்புறத்தில் மின்னல் வேகத்தில் மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. 

uttar pradesh car accident... Six people dead tvk

இந்த விபத்தில் ஷிவம், பர்ஷ், குணால், தீரஜ், விஷால் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 6 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

uttar pradesh car accident... Six people dead tvk

விபத்தில் உருக்குலைந்த காரை கிரேன் மூலம் மீட்டனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

From around the web