இறைச்சி வாங்க சென்ற போது அதிர்ச்சி.. பிக்கப் வேன் மோதி கணவன் கண் முன்னே மனைவி பலியான சோகம்!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏகே.மோட்டூர் பகுதியை சேர்ந்த சிவானந்தன் (50) மற்றும் இவருடைய மனைவி பழனியம்மாள் (45) இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து திருப்பத்தூருக்கு இறைச்சி வாங்க வந்துள்ளனர். அப்போது அனேரி அருகே உள்ள ஆண்டி வட்டம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அதேபோல் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிலர் செங்கத்திற்கு எருது விடும் திருவிழாவிற்குகாக மாட்டை பிக்கப் வேணில் ஏற்றிக்கொண்டு இளைஞர்கள் ஆண்டி வட்டம் பகுதியில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த சிவநாதனின் இருசக்கர வாகனத்தில் மீது அதிவேகமாக மோதியதில் கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவநாதன் பலத்த காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்கள் மற்றும் இளைஞர்கள் மாட்டுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.இந்த சம்பவம் இந்த அறிந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறைச்சி வாங்க திருப்பத்தூருக்கு கணவன் மனைவி வந்த நிலையில் விபத்துக்குள்ளாகி மனைவி கணவன் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா