பிஎம் கிசான் 24-வது தவணை எப்போது? - வெளியான புதிய தகவல்!

 
பி.எம். கிசான் விவசாயி

பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி, தலா ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. திட்டத்தின் 23-வது தவணைத் தொகை கடந்த ஜூன் 20-ஆம் தேதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 24-வது தவணைத் தொகையானது வரும் அக்டோபர் மாதத்தில் வரவு வைக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஎம் கிசான்

மத்திய அரசு இதுவரை 24-வது தவணைக்கான அதிகாரப்பூர்வ தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.  தவணைத் தொகை கணக்கில் வரவு வைக்கப்படுவதற்கு முன்பாக, விவசாயிகள் தங்களது விண்ணப்ப நிலையை அதிகாரப்பூர்வ pmkisan.gov.in இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும்.

வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு மற்றும் e-KYC நடைமுறைகளை முழுமையாக முடித்துள்ள தகுதியான விவசாயிகளுக்கு மட்டுமே அடுத்த தவணைத் தொகை தடையின்றிச் சென்றடையும்.