CBSE 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை எப்போது? - முக்கிய அப்டேட்!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (CBSE) 2027-ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. மாணவர்களின் தேர்வு க்கு உதவும் வகையில் இதற்கான தற்காலிகத் தேர்வு அட்டவணை இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஎஸ்இ 2027 பொதுத்தேர்வுக்கான தற்காலிக அட்டவணை விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும், வாரியத்தின் தரப்பில் அதிகாரப்பூர்வத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த கல்வி ஆண்டில் தற்காலிகத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 24-ம் தேதியன்றும், இறுதி அட்டவணை அக்டோபர் 30-ஆம் தேதியன்றும் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கம்போல இம்முறையும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான பாடவாரியான இறுதித் தேர்வு அட்டவணை வெளியானவுடன், மாணவர்கள் அதைக் கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
