எப்பூட்றா... அனிருத் ரிஷப்சனில் சிம்பு, நயன்தாரா சந்தித்து பேச்சு.. வைரலாகும் நெல்சனின் ரியாக்ஷன்!
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்ற திரையுலகப் பிரபலங்களின் சுவாரசியமான தருணங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்த போது, அருகில் நின்றிருந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களை ஓரக்கண்ணால் பார்த்த காட்சி கேமராவில் சிக்கி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு விழாவில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அப்போது விழா அரங்கில் சந்தித்துக்கொண்ட நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் எந்தவிதத் தயக்கமுமின்றி மிகவும் இயல்பாகவும் ஜாலியாகவும் பேசிக் கொண்டிருந்தனர்.

மூவரும் உரையாடிக் கொண்டிருந்த தருணத்தில், சற்றுத் தொலைவில் நின்றிருந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் பேசுவதை ஓரக்கண்ணால் கவனித்தபடி நின்றிருந்தார். இந்தத் தருணத்தைப் புகைப்படக் கலைஞர்கள் துல்லியமாகப் படம் பிடித்துள்ளனர்.
அனிருத் ரிசப்ஷன் புகைப்படங்கள் வெளியான நிலையில், சிம்பு - நயன்தாரா - விக்னேஷ் சிவன் உரையாடலும், பின்னணியில் நெல்சன் திலீப்குமார் கொடுக்கும் எக்ஸ்பிரஷனும் கொண்ட புகைப்படம் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், முன்னாள் காதலர்களான சிம்புவும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனுடன் இணைந்து சகஜமாகப் பேசுவதை நெல்சன் தனது படங்களின் டார்க் காமெடி பாணியில் இப்படிப் பார்க்கிறாரே எனப் பல்வேறு நகைச்சுவையான மீம்களையும் கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த காலக் கசப்புகளை மறந்து சிம்பு, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் பொது நிகழ்வில் மிகுந்த நட்புடன் உரையாடியதை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அனிருத் திருமண வரவேற்பு விழாவின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது.
