நவம்பர் 28 வரை எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்?

 
ஆரஞ்சு

 தமிழகத்தில் வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் எனப் பெயரிடப்படப்பட்டு இருப்பதாக  இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. 
புயல் உருவான பிறகு அதற்கடுத்த இருநாட்களில்  மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்பதால்  அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு


இந்நிலையில், இன்று முதல்  நவம்பர் 29ம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்பதற்கான தகவல்கள்  வெளியாகியுள்ளது.அதன்படி, இன்று நவம்பர் 26ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆரஞ்சு அலர்ட்
நாளை நவம்பர் 27ம் தேதி புதன்கிழமை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை மறுநாள் நவம்பர் 28ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக்கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்த தேதிகளில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம்   தெரிவித்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web