துப்பாக்கியைச் சுத்தம் செய்தபோது தற்செயலாகக் குண்டு பாய்ந்து எஸ்.ஐ. உயிரிழப்பு!

 
துப்பாக்கி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஜோகிந்தர் சிங் என்பவர், தனது சொந்தத் துப்பாக்கியைச் சுத்தம் செய்தபோது தற்செயலாகக் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அமிர்தசரஸில் எஸ்.ஐ.-யாகப் பணிபுரிந்து வந்த ஜோகிந்தர் சிங், தனது வீட்டின் அருகே உள்ள பூங்காவில் தனது அதிகாரப்பூர்வ அஸால்ட் ரைபிள் (Assault Rifle) துப்பாக்கியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பள்ளி மானவி தற்கொலை

துப்பாக்கியைச் சுத்தம் செய்யும்போது, அதில் தோட்டா சிக்கியிருப்பதை அவர் கவனிக்கத் தவறியதாகக் கூறப்படுகின்றது. திடீரெனத் துப்பாக்கி வெடித்துத் தோட்டா அவரது உடலில் பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்து நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, துப்பாக்கியில் தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.