GOAT படத்தின் ' Whistle Podu'வீடியோ பாடல் வெளியானது!
தமிழகத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உட்பட பல முண்ணனி திரை நட்சத்திரங்களில் நடிப்பில் உருவான படம் கோட். இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ரிலீசாகி சக்கை போடு போட்டு வருகிறது. வெங்கட் பிரபு. முன்னதாக அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மற்ற மொழி ரசிகர்களை தவிர கோட் படம் தமிழில் ரசிகர்களை கவர்ந்து சிறப்பான வசூலையே பெற்று வருகிறது. சர்வதேச அளவில் இந்தப்படம் கடந்த 11 நாட்களில் 380க்கு மேற்பட்ட கோடிகளை வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகி கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச அளவில் ரிலீஸானது கோட் படம். இந்த படத்தில் ரசிகர்கள் கொண்டாட பல விஷயங்களை இணைந்திருந்தார் வெங்கட் பிரபு. படத்தில் அரவிந்த், வைபவ், பிரேம்ஜி என வெங்கட் பிரபுவின் கேங்கும் இணைந்திருந்த நிலையில் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படம் சில கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் தொடர்ந்து தமிழகத்தில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் விசில் போடு பாடலின் வீடியோவை இன்றைய தினம் ஏஜிஎஸ் நிறுவனம் தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக லிரிக் வீடியோவாக வெளியான இந்த பாடல் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.

ஆயினும் திரையரங்கில் படத்தின் காட்சியுடன் சேர்த்து பார்க்கும்போது இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மிகப்பெரிய ஆபரேஷனை செய்து முடித்த பின்பு விஜய் மற்றும் அவரது நண்பர்கள் பார்ட்டி பண்ணுவதாக இந்தப் பாடல் அமைந்திருந்தது. லிரிக் வீடியோவாக வெளியாகி இருந்த இந்த பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் இந்த பாடலுடன் பார்ட்டி செய்ய தயாராகி வருகின்றனர். இந்த பாடலில் நடிகர் விஜய் campaignஐ துவங்கட்டுமா எனக் கேட்கிறார். நடிகர் பிரபுதேவா என்ன சொன்னாய் என்று கேட்க, ஷாம்பெயின் என்றுதான் சொன்னேன் என அவர் கூறுவதாக இந்த பாடலின் துவக்கம் அமைந்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த பாடல் ரசிகர்களுக்கு போகப் போக பிடித்தமானதாக அமைந்துள்ளது.
