கிரகங்களின் சஞ்சாரத்தால் யாருக்கு ஜாக்பாட்? யாருக்கு இழுபறி? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

 
ராசிபலன் rasibalan astrology rasi ராசிபலன் rasibalan astrology rasi

இன்று ஜூன் 15 திங்கட்கிழமை, நவகிரகங்களின் சஞ்சாரம் மற்றும் சந்திரனின் நகர்வுகளின் அடிப்படையில், 12 ராசிகளுக்கான இன்றைய நல்வாய்ப்புகளும், எச்சரிக்கைகளும் தெரிஞ்சுக்கோங்க. 

மேஷம் : இன்று உங்களுக்குத் தொட்டதெல்லாம் துலங்கும் நன்னாள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று மின்னல் வேகத்தில் முடிவடையும். அலுவலகத்தில் உங்களது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்; லாபம் பன்மடங்கு எகிறும். புதிய முதலீடுகளில் மட்டும் சற்றே நிதானம் தேவை.

அதிர்ஷ்ட எண்: 9 | அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

ரிஷபம் : இன்று உங்களுக்கு வரவுக்கு மிஞ்சிய செலவுகள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆடம்பரப் பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்பது பாக்கெட்டுக்கு நல்லது. சக ஊழியர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை; வீண் விவாதங்கள் வரலாம். தொழிலில் உதிரிப் பாகங்களின் விலை உயர்வு காரணமாகச் சிறிய தேக்க நிலை ஏற்படலாம். கடன் கொடுப்பது, வாங்குவது இரண்டையும் இன்று மூட்டைக் கட்டி வையுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 6 | அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம் : குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கான திட்டமிடல் விறுவிறுப்பாக நடைபெறும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் அல்லது சம்பள உயர்வுக்கான சூழல் கனிந்து வரும். ஆன்லைன் வியாபாரம் செய்பவர்களுக்கு ஜாக்பாட் ஆர்டர்கள் குவியும். மாலை நேரத்தில் தூரத்துப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்: 5 | அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம் : தள்ளிப்போன முக்கிய வேலைகளை இன்று போர்க்கால அடிப்படையில் முடித்துக் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நிலவி வந்த மர்மக் காய்ச்சல், சோர்வு நீங்கி சுறுசுறுப்பு பிறக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு மழையில் நனைவீர்கள். கூட்டு வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்; நல்ல வருமானம் வந்து சேரும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை; வெளிநாட்டு உணவுகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட எண்: 2 | அதிர்ஷ்ட நிறம்: முத்து வெள்ளை

ராசிபலன்கள் ராசி ஜோதிடம்

சிம்மம் : மனதில் இருந்த இனம் புரியாத அச்சம் விலகி, அதிரடியான முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களது கௌரவம் அந்தஸ்து உயரும். கலைத்துறை மற்றும் அரசியல் துறையினருக்குப் புதிய நல்வாய்ப்புகள் கதவைத் தட்டும். லாரி மற்றும் போக்குவரத்துத் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பிள்ளைகளின் வீண் பிடிவாதத்தால் வீட்டில் சிறிய சலசலப்பு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 1 | அதிர்ஷ்ட நிறம்: சூரிய ஆரஞ்சு

கன்னி : இன்று உங்களுக்கு எிலும் சற்றே இழுபறி நிலை நீடிக்கும். "பதறாத காரியம் சிதறாது" என்பதற்கேற்ப, எந்த ஒரு காரியத்தையும் அவசரப்படாமல் நிதானமாகக் கையாளுங்கள். ஐடி துறையில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். வியாபாரத்தில் பாக்கிக் கடன்களை வசூலிப்பதில் கடுமையான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். புதிய வாகனங்களை இயக்கும்போது சாலை விதிகளையும், வேகத்தையும் கட்டுப்பாட்டில் வையுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 5 | அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

துலாம் : உங்களது நீண்ட நாள் கனவு ஒன்று இன்று நனவாக வாய்ப்புள்ளது. வெளியூரில் இருந்து மனதிற்குப் பிடித்தமான நல்ல சுபச் செய்திகள் வந்து சேரும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் இருந்து நேர்காணல் அழைப்புகள் வரும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட எண்: 7 | அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

விருச்சிகம் : பொருளாதார ரீதியாக இன்று உங்களுக்குப் பொன்னான நாள். எதிர்பாராத வாரிசு சொத்துக்கள் அல்லது பழைய முதலீடுகள் மூலம் கையில் பணம் புரளும். உத்தியோகத்தில் உங்களது ஆலோசனைகள் முதலாளிகளால் ஏற்றுக்கொள்ளப்படும். புதிய கிளைகளைத் தொடங்க நினைக்கும் வியாபாரிகளுக்குத் தாராள வங்கி நிதியுதவி கிடைக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்; இல்லையெனில் நல்ல உறவுகள் பிரியலாம்.

அதிர்ஷ்ட எண்: 9 | அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

தனுசு : இன்று உங்களுக்குப் புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குலதெய்வக் கோயில்கள் அல்லது பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களுக்குக் குடும்பத்தோடு செல்லத் திட்டமிடுவீர்கள். வெளிநாடு தொடர்புடைய வேலைகளில் இருந்த தடைகள் அகலும். உதிரிப் பாகங்கள் மற்றும் ஆட்டோமொபைல் தொழில் செய்பவர்கள் கணிசமான லாபத்தைப் பார்ப்பார்கள். சொத்து விவகாரங்களில் தற்போதைக்கு எந்த இறுதி முடிவும் எடுக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட எண்: 3 | அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

ஜோதிடம் ராசி ராசிபலன்கள் நேரம் யோகம் அதிர்ஷ்டம்

மகரம் : இன்று தேவையற்ற அலைச்சல்களும், அதனால் உடல் சோர்வும் ஏற்படலாம். திட்டமிட்ட காரியங்கள் தள்ளிப் போவதால் மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் வேலைகளையும் நீங்கள் சுமக்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவினாலும், உங்களது சாமர்த்தியத்தால் வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பீர்கள். மொபைல் போன், சார்ஜர் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது அதீத எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட எண்: 8 | அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம் : தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டக் காற்று இன்று உங்கள் பக்கம் வீசுகிறது. உங்களது தனித்தன்மையும், மிடுக்கான தோற்றமும் மற்றவர்களைக் கவரும். அரசியல் மற்றும் அரசுத் துறையில் உள்ளவர்களுக்குப் புதிய பதவிகள் கைகூடி வரும். உணவு, தங்குமிடம் மற்றும் விடுதித் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் வாரி இறைக்கப்படும். உறவினர்களிடம் குடும்ப ரகசியங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட எண்: 4 | அதிர்ஷ்ட நிறம்: -கருநீலம்

மீனம் : உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த எதிர்ப்புகள் அடியோடு விலகும். நீண்ட நாட்களாக வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் மற்றும் அனுமதிகள் எளிதாகக் கிடைக்கும். மினி லாரி மற்றும் போக்குவரத்து முகவர்களுக்கு இன்று புதிய புக்கிங்குகள் மூலம் நல்ல வருமானம் உண்டு. வீண் வதந்திகளையும், அடுத்தவர் வீட்டுப் பஞ்சாயத்துகளையும் காதில் வாங்க வேண்டாம்.

அதிர்ஷ்ட எண்: 3 | அதி|ஷ்ட நிறம்: தங்க நிறம்