மதுராந்தகம், தாராபுரத்தைக் கைபற்றப் போவது யாரு? இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு!

 
பிரச்சாரம் தேர்தல் இடைத்தேர்தல் வாக்குசேகரிப்பு

தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புக்காக 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் திறக்கப்பட உள்ளன.

இடைத்தேர்தல்

வழக்கம் போல் காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் சுத்துசுத்தாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மதுராந்தகம் தொகுதியில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 21 முதல் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இங்கு கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 86.26% வாக்குகள் பதிவாகியிருந்தது.

வாக்கு எண்ணிக்கை காவல் தேர்தல் மையம் பாதுகாப்பு

தாராபுரம் தொகுதியில் 80.25% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இங்கு பதிவான வாக்குகளும் தீவிரப் பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன.

தவெக சார்பில் களமிறங்கியுள்ள முன்னாள் எம்.எல்.ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்) மற்றும் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதால், இன்றைய தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.