தலைவா 169 படத்தின் கதாநாயகி இவர் தான்!! வெளியான ரகசிய தகவல்!!
தமிழ் திரை உலகில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சமீபத்தில் இவர் நடித்த 'அண்ணாத்த' படம் பல விமரிசனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

தற்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ரஜினி நடிக்க உள்ளார். சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசை அனிருத் . அதிரடியும், குடும்ப கதையம்சமும் உள்ள படமாக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகை தேர்வு நடக்கிறது. இந்த படத்தின் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். இவர் ஏற்கனவே 2010ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'எந்திரன்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
