"டம்மி முதல்வருக்கு யார் அமைச்சர்? யார் எம்.எல்.ஏ.ன்னு கூடத் தெரியலை" - உதயநிதி ஸ்டாலின்!
தவெக அரசு 'நின்றால் கைது, நடந்தால் கைது' என்ற வகையில் மிகவும் மோசமான பாசிச அரசாகச் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி, "காவல்துறையினர் என்னைக் கைது செய்ய வந்தபோது நான் பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். என்னைக் கைது செய்தது ஒரு மிகப்பெரிய காமெடி" என்று குறிப்பிட்டார். தற்போது ஆட்சியில் உள்ள தவெக அரசு, நின்றாலும் நடந்தாலும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மோசமான பாசிச அரசாக மாறியுள்ளது எனச் சாடினார்.

எதிர்க்கட்சிகள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்லக்கூடிய அளவுக்குத் தவெக அரசிடம் அறிவு சார்ந்த பதில்கள் எதுவுமில்லை என்று அவர் விமர்சித்தார். தவெக அரசை 'டம்மி அரசு' என்றும், அதன் முதல்வரை 'டம்மி முதல்வர்' என்றும் குறிப்பிட்ட அவர், இந்த டம்மி முதல்வருக்குத் தன் ஆட்சியில் யார் அமைச்சர், யார் எம்.எல்.ஏ என்று கூடத் தெரியவில்லை எனத் தனது பேச்சில் மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
