தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?! - மே 4 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிவிடும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி காலை 8 மணிக்கு துவங்கிவிடும். காலை தபால் வாக்குகள் மற்றும் சேவை வாக்காளர்களின் வாக்குகள் எண்ணும் பணி 8 மணிக்கு தொடங்கும். காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். தமிழகம் முழுவதும் மொத்தம் 62 மையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் துணை ராணுவப் படையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் மையங்கள் கண்காணிக்கப்படுகின்றன. தேர்தல் விதிமுறைப்படி, சேவை வாக்காளர்களின் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரமான காலை 8 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

வழக்கமாக காலை 10 மணி அளவில் முதல் கட்ட முன்னிலை நிலவரங்கள் தெரியவரும். மதியத்திற்குள் பெரும்பாலான தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த தெளிவான பிம்பம் கிடைத்துவிடும்.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என மும்முனைப் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், தமிழக மக்கள் யாருக்கு அரியணை வழங்கப் போகிறார்கள் என்பது மே 4-ம் தேதி மதியம் தெரிந்துவிடும்.
