பூடானில் வானளாவிய கட்டிடங்கள் இல்லாதது ஏன்? சுவாரஸ்யமான பின்னணி!

 
பூடான்

உலக நாடுகள் பலவும் நவீன வளர்ச்சியின் அடையாளமாக வானளாவிய உயரமான கட்டிடங்களைக் கட்டிக் குவித்து வரும் நிலையில், இந்தியாவின் அண்டை நாடான பூடானில் அத்தகைய கட்டிடங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளன.

நாட்டின் பாரம்பரியக் கட்டிடக்கலையையும் இயற்கைச் சூழலையும் எவ்வித சேதாரமும் இன்றிப் பாதுகாப்பதற்காக பூடானில் உயரமான கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை.

நாட்டின் தனித்துவமான கலாச்சார அடையாளங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில், பூடான் அரசு கடுமையான கட்டுமானக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகிறது.

பொருளாதார வளர்ச்சியை மட்டுமே பிரதானமாகக் கருதாமல், மக்களின் மகிழ்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பண்பாட்டு விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் 'மொத்த தேசிய மகிழ்ச்சி' என்ற உன்னதக் கொள்கையின் அடிப்படையில் பூடான் இயங்கி வருவது உலகளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.