"பதவியை ஏன் ராஜினாமா செய்தேன்?” - மதுராந்தகம் பிரசாரத்தில் மரகதம் குமரவேல் விளக்கம்!

 
மதுராந்தகம் மரகதம் இடைத்தேர்தல்

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேல், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தான் பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து விரிவாக விளக்கிப் பேசியுள்ளார்.

மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய மரகதம் குமரவேல், தான் எந்தவித சுயநலத்திற்காகவும் கட்சிகளை மாறவில்லை என்றும், மதுராந்தக மக்களின் நலனுக்காகவும் உரிமைகளுக்காகவுமே தவெகவில் இணைந்ததாகத் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் மதுராந்தகம் தாராபுரம் மரகதம் குமரவேல் சத்யபாமா

தான் அவசரமாகப் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தவெகவில் ஐக்கியமானதாகத் தன் மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், அதற்குப் பின்னால் இருந்த அரசியல் சூழலை விளக்கினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுவதும் கடுமையாக எதிர்த்து வந்த திமுகவுடன், தற்போதைய அதிமுக தலைமை கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க ரகசியமாக முயன்றதாகவும், ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு விரோதமான இந்தச் செயலையும் சமரசத்தையும் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதாலேயே பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்ததாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.