ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது ஏன்? - குஷ்பு சொன்ன காரணம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தலைவர் 173' படத்திலிருந்து இயக்குநர் சுந்தர்.சி விலகியது குறித்து பிரபல நடிகை குஷ்பு நேர்காணல் ஒன்றில் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சுந்தர்.சி ஏதோ ஒரு காரணத்தினால் தான் இப்படத்திலிருந்து விலகியதாகக் குறிப்பிட்ட குஷ்பு, ஒரு இயக்குநருக்கு எந்தப் படத்தை இயக்க வேண்டும், எதை இயக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும் முழு உரிமை உள்ளது என்று தெரிவித்தார்.

சுந்தர்.சி இந்தத் திரைப்படத்தை இயக்கப் போவதில்லை என்ற முடிவை, இப்படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசனுக்குத் தொலைபேசி வாயிலாகத் தானே அழைத்துத் தெரிவித்ததாகவும் குஷ்பு கூறியுள்ளார்.
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது தொடர்பாக, பலரைப் போலவே தனக்கும் சில சந்தேகங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். சில நேரங்களில் தேசிய விருது பெறும் படங்களை விடவும், ஒடியா மொழி போன்ற பிற பிராந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்கள் மிகவும் சிறப்பாக அமைவதாகத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
