லாட்டரி நிறுவனத்திடம் இருந்து திமுக ரூ.900 கோடி வாங்கியது ஏன்? சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

 
ஆதவ் அர்ஜுனா

சட்டப்பேரவை விவாதத்தின் போது பேசிய பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குக் காட்டமாகப் பதிலளித்தார்.

எதிர்க்கட்சியினர் லாட்டரி குறித்துத் தொடர்ந்து பேசி வரும் நிலையில், "லாட்டரி நிறுவனத்திடம் இருந்து ரூ.900 கோடி ரூபாயை திமுக எதற்காக வாங்கியது? தைரியம் இருந்தால் அதற்குப் பதிலளியுங்கள்" எனச் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். "நான் லாட்டரி உட்பட எந்தவொரு தொழில் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை" என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஆதவ் அர்ஜூனா

திமுகவின் முக்கிய நிர்வாகிகளும், ஜெகத்ரட்சகன் போன்ற தலைவர்களும் சாராய ஆலைகளை நடத்தி வருவதை சுட்டிக்காட்டிய அவர், முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு அமைச்சரவைக் கூட்டத்திலும், "லஞ்சம் என்பது மன்னிக்க முடியாத மிகப்பெரிய குற்றம்" என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். லஞ்சத்தில் ஈடுபடும் எவரும் அமைச்சரவையில் நீடிக்க முடியாது என்பதில் முதலமைச்சர் மிகத் தெளிவாக உள்ளார்.

தற்போதைய த.வெ.க. ஆட்சியில் இதுவரை எந்தவொரு துறையிலும் ஒரு ரூபாய் கூட லஞ்சமாகப் பெறப்படவில்லை என அவர் பெருமிதத்துடன் பதிவு செய்தார்.

சரியான முறையில் செயல்படாமல் முடங்கிக்கிடந்த அம்மா உணவகங்களுக்குத் தகுந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவை மக்கள் பயன்பாட்டிற்காகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது உரையில் குறிப்பிட்டார்.