போதை “மதுவை” மறந்தது ஏன்? - CM விஜய்க்கு கேள்வி!

 
கிருஷ்ணசாமி

தமிழகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டம் மற்றும் புதிய விழிப்புணர்வு முழக்கங்கள் குறித்து, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி அண்மையில் 'ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்' என்ற பெயரில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கோள் காட்டி, டாக்டர் கே. கிருஷ்ணசாமி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், அரசே நடத்தும் டாஸ்மாக் மது விற்பனையைத் தடுத்து நிறுத்தாமல் போதைப்பொருட்களை ஒழிக்க முடியாது என அவர் கேள்வியெழுப்பி உள்ளார்.

"'ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs' என்பது மிகச் சிறந்த முழக்கம், நல்ல நோக்கம் தான். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், தமிழகத்தில் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டியது கஞ்சா, போதை ஊசிகள் மற்றும் சில போதை மாத்திரைகள் மட்டுமல்ல; ஆண்டுக்கு நாலரை லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசே நேரடியாகத் தமிழகம் முழுவதும் கடைகளைத் திறந்து விற்பனை செய்து, லட்சக்கணக்கான குடும்பங்களுக்கும், நாட்டின் இளைஞர் நலனுக்கும் கேடு விளைவித்து வரும் டாஸ்மாக் மதுபானமும்தான் என்பதை முதலமைச்சர் விஜய் முற்றிலும் மறந்தது ஏனோ?"