"த்ரிஷாவுக்கு முன்வரிசை ஏன்?" – இடும்பாவனம் கார்த்திக் கேள்வி!
Oct 12, 2026, 17:30 IST
பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற அரசு விழாவில், எந்தவொரு அரசுப் பதவிலும் இல்லாத நயினார் நாகேந்திரன் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டதாக காங்கிரஸ் நிர்வாகி மாணிக்கம் தாகூர் எழுப்பிய கேள்வி நியாயமானது தான் என்று நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.
நயினார் நாகேந்திரன் விவகாரம் குறித்துப் பேசிய அவர், அதேசமயம் கடந்த சுதந்திர தின விழா மேடையின் முன்வரிசையில் எந்த விதிகளின் அடிப்படையில் நடிகை த்ரிஷா அமர வைக்கப்பட்டார் என்பதையும் காங்கிரஸ் கட்சியும் அரச தரப்பும் விளக்க வேண்டும் என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

அரசு நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் இருக்கை ஒதுக்கீடு குறித்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.
