அமாவாசை தினத்தில் ஏன் உணவில் வெங்காயம், பூண்டு சேர்க்க கூடாது?! - அறிவியல், ஆன்மிக காரணங்கள்!

 
வாழையிலை படையல் நைவேத்யம் அமாவாசை விருந்து

அமாவாசை தினங்களில், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் நாட்களில், விரதம் இருக்கும் நாட்களில் உணவில் வெங்காயம் பூண்டு போன்றவைகளைத் தவிர்க்க சொல்கிறது நமது இந்து மதம். பொதுவாக இந்து மதத்தில் சொல்லப்படுகிற ஒவ்வொரு விஷயத்திற்கும் விஞ்ஞான ரீதியான காரணங்கள் உண்டு.

அமாவாசையில் வெங்காயம் மற்றும் பூண்டை ஏன் உணவில் சேர்க்க கூடாது?

அதன்படி ஆயுர்வேத மருத்துவம் வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ள எப்போதும் பரிந்துரைப்பதில்லை. ஜோதிட ரீதியாகப் பார்த்தாலும் கூட வெங்காயம், பூண்டு போன்றவைகளை ராகு கேது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

அமாவாசையில் வெங்காயம் மற்றும் பூண்டை ஏன் உணவில் சேர்க்க கூடாது?

மருத்துவ ரீதியாக ஆரோக்கிய நலன்களை கருத்தில் கொண்டு பூண்டு வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் மாதத்தில் இந்த 5 நாட்களிலாவது பூண்டு வெங்காயத்தை உணவில் சேர்ப்பதைத் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது.

அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது, முன்னோர்களுக்கு இடும் படையலில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் செய்வது சிறப்பான பலன்களை தரும். மேலும் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை தானம் செய்யலாம். அத்துடன் அமாவாசையில் மாலையில் வீட்டின் உயரமான இடத்தில் தென் திசையில் முன்னோர்களை நினைத்து ஒரு விளக்கை ஏற்றி வைக்கலாம். இதன் மூலம் நமது சந்ததியினர் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்பது நம்பிக்கை.