அன்பில் மகேஷ் கைது ஏன்? காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம்!

 
அன்பில் மகேஷ்

தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டது குறித்துச் சென்னை பெருநகர காவல்துறை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசிடமிருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சப் பணம் வசூலித்து மோசடி செய்ததாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே தொடர்புடைய பி.டி.அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ் மற்றும் அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்தி, அருண் பிரகாஷ், பிரகாஷ் மற்றும் உறவினர்களுக்குச் சொந்தமான திருச்சி, சென்னை, கள்ளக்குறிச்சி இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

அன்பில் மகேஷ்

இதன் தொடர்ச்சியாக, சென்னை அமைந்தகரையில் வைத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்குக் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.