“விதவை பென்ஷன்.. கணவனின் அரசு வேலை கிடைக்கும்...” கள்ளக்காதலனுக்காக கணவனைக் கொன்ற மனைவி... அதிர்ச்சி வாக்குமூலம்!

 
கள்ளக்காதல்

கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைக்கும், விதவை பென்ஷன் கிடைக்கும். எந்த இடையூறும் இல்லாமல் நினைத்த போதெல்லாம் கள்ளக்காதலனுடன் சேர்ந்து உல்லாசமாக வாழலான் என்று நினைத்து தனது கணவரைக் கொடூரமாகக் கொலை செய்ததாக மனைவி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்தவர் மங்லேஷ் பால். இவருடைய மனைவி சோனாலி குமாரி. இவர்களுக்கு இடையே சில காலமாக மனக்கசப்பு இருந்த நிலையில், சோனாலி குமாரிக்கு கௌஷிக் குமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கௌஷிக் குமாருடன் தடையின்றிச் சுற்றித் திரிவதற்கும், மேலும் மங்லேஷ் பாலின் இறப்புக்குப் பின் கருணை அடிப்படையில் அரசு வேலை பெறுவதற்கும் சோனாலி திட்டமிட்டுள்ளார்.

கள்ளக்காதல்

இதற்காக தனது கணவனைத் தீர்த்துக்கட்ட காதலனுடன் சேர்ந்து சோனாலி திட்டமிட்டுள்ளார். அதன்படி, மங்லேஷ் பாலைத் திட்டமிட்டுக் கொன்ற பிறகு, தங்கள் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் தனது கணவரைத் தாக்கிவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார்.

மனைவியின் பேச்சில் சந்தேகம் அடைந்த ஜித்தி காவல்துறையினர், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சோனாலி முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார். காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அரசு வேலை மற்றும் கள்ளக்காதலுக்காக மனைவியே தனது கணவரைக் காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டுக் கொலை செய்தது அம்பலமானது.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

இதையடுத்து, சோனாலி குமாரி மற்றும் அவரது கள்ளக்காதலன் கௌஷிக் குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.